வியப்பின் தரித்திரக் குறியீடு அல்ல அது சண்டாள சமுதாயத்தின் அடையாளம் அது

ஆம் 1738 - ம் ஆண்டு ஸௌடாக் மாகாணத்தில் பிறந்த ஸூவாங்டா ஸீவ் என்ற குறிஞர் வானத்தை பிளந்து ஆராய்வதாய் சொன்ன இவர்
கடைசி வரை ஆராயாமல் டிமிக்கி கொடுத்து காணாமல் போனார்.
சொன்னதை சொன்னபடி செய்யாமலும், சொல்லிக் கொள்ளாமல் மறைந்தும் பொன இவர் வியப்பின் தரித்திரக் குறியீடு
என்று கீழ்கண்ட இணைய தளத்தில் போடப்பட்டிருந்தது
http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=112848&url=killergee.blogspot.com

 மேல உள்ளவற்றிற்கு பதில் தான் கீழே என்னால் சொல்லபபட்டு இருக்கிறது.

வியப்பின் தரித்திரக் குறியீடு அல்ல அது சண்டாள சமுதாயத்தின் அடையாளம் அது
ஏன் அப்படி சொல்றேன்னா ஒரு விஞ்ஞானி ஒரு கண்டுபிடிப்பை கண்டு பிடிச்சுட்டா அது ஒரு நாட்டில் அவ்வளவு எளிதாக அறிவித்துவிட முடியாது! அதில் இருக்கு ஆயிரம் சிக்கல்கள். அதை கண்டுபிடிச்ச விஞ்ஞானிக்குதான் தெரியும் ஏண்டா நாமே கண்டு பிடிச்சோம்னு வெந்து நொந்து நூலா போயிருப்பாரு. ஒரு பக்கம் வெளியிலே சொன்ன உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது. இன்னொரு பக்கம் அறிவு திருட்டு கும்பல் எப்ப கவுத்தலாம்னு காத்துக்கிட்டு இருக்கும். உனது கண்டுபிடிப்புக்கு நாங்க அங்கீகாரம் அளித்தால் உனக்கு ஆண்டுக்கு இவ்வளவு வருமானம் வரும். அப்படின்னா  20 வருசத்துக்கு உனக்கு இவ்வளவு கிடைக்கும். அப்படின்னா எனக்கு நீ   இவ்வளவு கோடி தரலாமேனு லஞ்சம் கேட்க அரசியல் அதிகார வர்க்கம் காத்துக்கிட்டு இருக்கும் “சாப்பாட்டுக்கே வழியில்லாத விஞ்ஞானியிடம்”. மோசமான உலகமிது.  இப்படி யோசிச்சா எக்கச்சக்கமான சிக்கல்கள் உண்டு சமுதாயத்தில். இந்தியாவில் எத்தனை கோடி ஜனங்க இருக்காங்க! அவங்கள்ல யாருமே அறிவாளி இல்லேன்னு நீங்க நினைக்கிறீங்களா? எத்தனையோ பேர் இருப்பாங்க வேறு வழியில்லாம அறிவு திறமையை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு இருப்பார்கள். அல்லது நிஜத்தைக்கூட கற்பனை கதைன்னு எழுதி தள்ளிகிட்டு இருப்பாங்க.
உதாரணத்துக்கு கீழே 2 கதை லிங் இருக்கு அதை படிச்சு பாருங்க! அது எப்படிப்பட்ட கதையா இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

கதையின் சிறு பகுதி    
 நான் ஏன் பூமியை வி்ட்டு இங்கு வந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா?
 பூமியிலேயே மிக மிக நேர்மையான குணத்தோடு இறைவனால் படைக்கப்பட்டவன் நான். ஆனால் பூமியில் எனக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அங்கு நேர்மையானவர்கள் சந்தோஷமாக வாழக்கூடிய சூழ்நிலை  இல்லை. எல்லாம் பிராடுதனம். எல்லாம் பித்தலாட்டத்தனம். ஏமாற்றுதல் என்பது அங்கு அன்றாடம் நடக்கு நிகழ்ச்சி. அதனால் தான் நான் இங்கு ஆஷ்ட்ராய்டு பெல்டுக்கு வந்துவிட்டேன். இங்கே மனிதர்களின் சகவாசம் இல்லை. அதனால் மனிதர்களால் இனி தொல்லை இல்லை. மனிதர்களால் எனக்கு இனி ஆபத்தும் இல்லை

இந்த கதைக்கான லிங் கீழே
http://asteroid-belt-planet.blogspot.in/2015/04/1.html

பிரபல வானியல் ஆராய்ச்சி நிபுணர் ஸ்ரீ கிருஷ்ணசாமி தேவ்ராஜ் கைது!.
http://freesoftwaredelhi.blogspot.in/2015/04/blog-post.html